பாதிப்படைந்த இதயத்தின் செயற்பாட்டிற்கு செய்யக்கூடிய ரோபோ உருவாக்கம்

பிறப்பு : - இறப்பு :

பாதிப்படைந்த அல்லது செயலிழந்த இதயத்தினை மீண்டும் செயற்படுத்தக்கூடிய ரோபோ ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மென்மையான முறையில் செயற்படக்கூடிய இந்த ரோபோ இதயத்தினை அழுத்துவதன் ஊடாக இரத்த ஓட்டத்தினை சீராகப் பேணுகின்றது.

இதன் மூலம் நோயாளிக்கு மீண்டும் வினைத்திறனான முறையில் இரத்த ஓட்டம் கிடைக்கப்பெறுவதனால் ஆரோக்கியமாக இருக்க முடியும் என பொஸ்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் பணியாற்றும் Nikolay Vasilyev எனும் சத்திரசிகிச்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருதய நலிவடைதல் நோயினால் 5.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அரைப்பங்கினர் ஐந்து வருட காலப் பகுதியில் இறப்பினை சந்திக்க நேர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இப் புதிய சாதனம் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க உதவும் என்பது திண்ணம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit