புதிய iPhone SE கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் ஆப்பிள்: எப்போது தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

இதில் iPhone X கைப்பேசிக்கு பலத்த வரவேற்பு கிடைக்கப்பெற்று வருகின்றது.

இந்நிலையில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி iPhone SE கைப்பேசியின் புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் களமிறங்கியுள்ளது.

இக் கைப்பேசியினை 2018ம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதிக்குள் அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் எனவும் அத் தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இதில் Apple A10 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 1700 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*