
கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் மாவீரர் நாளுக்கான புனரமைப்பு பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
வீதி புனரமைப்பு, கொடிகம்பம் நாட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரிதகதியில் நடைபெற்றுள்ளது.
இந்த வேளையில், மாவீரர் தினத்திற்காக தயாராகும் அவர்களை அச்சமூட்டும் வகையில் பொலிஸார் அங்கே அதிக அளவில் பிரசன்னமாகி புகைப்படம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவர்களை அசட்டை செய்து விட்டு இளைஞர்கள் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.