மகனின் மரணத்தை விட தானம் பெற்றவர்களை பார்க்க முடியவில்லையே? துடிக்கும் பெற்றோர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழகத்தின் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் உடலுறுப்புகளை தானமாக அளித்தவர்களின் குடும்பத்தினர் 50 பேர் கலந்து கொண்டனர். அவர்களை தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி கௌரவித்தார்.

இந்நிலையில் இதில் கலந்து கொண்ட பொன்னேரியைச் சேர்ந்த செல்லப்பன் (55), என் மகனின் மரணத்தை விட, அவனின் இதயம் மற்றும் கண்களை தானமாகப் பெற்றவர்களை நாங்கள் பார்க்க முடியாதது அதிக வேதனையைத் தருகிறது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து கூறுகையில், கடந்த நவம்பர் மாதம் 14-ஆம் திகதி உறவினரைப் பார்க்க இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட தங்கள் மூத்த மகன் வினோத்(24) சென்னை – தடா சாலையில் சென்ற போது டிரக் மோதி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அப்போது மருத்துவர்கள் உடலுறுப்பு தானம் பற்றி கூறினார்கள். ஆனால், 24 வயதே ஆன என் மகனின் உறுப்புகளை தானம் அளிக்க எப்படி எங்களுக்கு மனம் வரும், இருப்பினும் அதைப் பற்றி மருத்துவர்கள் தொடர்ந்து விளக்கினர்.

இதனால் உடலுறுப்பு தானத்திற்கு சம்மதித்தோம், முதலில் நாங்கள் எங்கள் உறவினருக்கு தான் உறுப்பை தானம் அளிக்க முடிவு செய்தோம். ஆனால் மருத்துவ சோதனையில் அது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது.

அதன் பின், மகனின் கண்கள், இதயம், கல்லீரல், இரத்த நாளங்கள் அனைத்தும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

எதையும் எதிர்பார்த்து நாங்கள் இதைச் செய்யவில்லை. ஆனால், எங்கள் மகனின் இதயம் மற்றும் கண்களை தானமாகப் பெற்றவர்களை மட்டும் நாங்கள் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கெஞ்சினோம். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். இது எங்களை மிகவும் மோசமாக பாதித்தது என்று கூறியுள்ளனர்.

இது குறித்து தமிழக உடல் உறுப்பு மர்றும் அதிகாரிகள் கூறுகையில், தற்போதிருக்கும் உடல் உறுப்பு தானத்துக்கான விதிமுறைகளில், உடல் உறுப்புகளை தானம் பெறுவோரின் விவரங்கள், தானம் அளித்தவர்களுக்கு அளிக்கக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*