பறக்கும் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய பெண் விமானி

பிறப்பு : - இறப்பு :

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பெண் விமானி ஒருவர் கீழே குதித்து உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத நகரின் ஹகிம்பேட் பகுதியில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. நேற்றைய தினம் இங்குள்ள சிறிய ரக விமானத்தை இயக்க பெண் விமானி ரஷி ரெய்னா பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

அப்போது தொழிநுட்பக் கோளாறு காரணமாக திடீரென்று விமானம் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. ஆபத்தை உணர்ந்து கொண்ட அவர் சமயோசிதமாக பறக்கும் விமானத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.

ரஷி விமானத்தில் இருந்து குதித்த சில நிமிடங்களில் குறித்த விமானமானது தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்துள்ளது.

ரஷியின் சமயோசித புத்தியால் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் ரஷியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவது சமீப காலமாக வாடிக்கையாக நடந்து வருவதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit