
கர்ப்பிணியாக இருந்த பள்ளி மாணவியை கொலை செய்தது குறித்து கைதான காதலன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் வஜ்ரம். இவரின் மகள் லட்சுமி (14). ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியான இவர் 2 நாட்களுக்கு முன்பு முள்ளனூர் ஆற்றின் கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து பொலிசார் விசாரித்ததில் அதே ஊரை சேர்ந்த பிரதாப் (27) என்பவர் தான் லட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் பிரதாப்பை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், பிரதாப் லட்சுமியின் தூரத்து உறவினர். பிரதாப் காதலிப்பதாக கூறியதால் அதனை நம்பி லட்சுமி அவருடன் நெருங்கி பழகியதால் 2 மாத கர்ப்பமடைந்தார்.
பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ள லட்சுமி, பிரதாப்பிடம் வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து லட்சுமியை கொல்ல முடிவெடுத்த பிரதாப் அவரை ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை அங்குள்ள பாலத்தின் கீழ் போட்டு விட்டு சென்றதாக பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும் பிரதாப்பிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.