ஒரு மாணவி மட்டும் கிணற்றில் குதிக்காமல் தப்பியது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்கள்!

பிறப்பு : - இறப்பு :

அரக்கோணம் அருகே அரசுப்பள்ளி மாணவிகள் நான்கு பேர், ஆசிரியை திட்டியதால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், அவர்களுடன் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொள்ள இருந்ததும், கடைசி நேரத்தில் அவர் மட்டும் தப்பித்ததும் தெரிய வந்துள்ளது.

அரக்கோணம் அருகே உள்ள பணப்பாக்கம் அரசுப்பள்ளியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆவர். 11ஆம் வகுப்பு மாணவிகளான இவர்கள், தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால்,

ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்களை வரச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பெற்றோர்களை மாணவிகள் அழைத்து வராததால், ஆசிரியர்கள் அவர்களை திட்டி, வகுப்புக்கு வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது.

அதனால் மனமுடைந்த மாணவிகள் மோனிஷா, ரேவதி, தீபா, சங்கரி ஆகியோருடன் மேலும் ஒரு மாணவியும் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்ள ஐந்து மாணவிகளும் கைகோர்த்துக் கொண்டு தயாரானபோது, ஒரு மாணவி மட்டும் பயத்தில் ஓடிவந்துவிட்டார். எனினும் மற்ற நான்கு மாணவிகளும் குதித்துள்ளனர்.

தப்பி வந்த மாணவி, ஆசிரியர்களிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். ஆனால், அந்த மாணவி மீது சந்தேகமடைந்த ஆசிரியர்கள் துருவி துருவி கேட்டபோது உண்மையை கூறிவிட்டார்.

இதன்பிறகே கிணற்று பகுதிக்கு ஆசிரியர்கள் விரைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit