சப்ப மேட்டர டீல் பண்ண சுப்ரீம் கோர்ட்டா? நீதிபதிகள் கண்டிப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நீதிமன்றங்களில் அற்பமான விஷயங்களுக்காக பொதுநல வழக்கு தொடரப்படுவதாக உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

2015 ம் ஆண்டு சட்டிஸ்கர் மாநிலம் ராய்பூரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொதுக் கூட்டத்திற்கு அமைக்கப்பட்ட மேடை பற்றி தேசிய புலனாய்வு குழு அல்லது சிபிஐ விசாரணை கோரி சட்டீஸ்கரி சமாஜ் கட்சியை பிரமுகர் ஒருவர் சட்டிஸ்கர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் ரூ.25,000 அபராதமும் விதித்தது.

இதனை எதிர்த்து மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “இது போன்ற அற்பமான காரணங்களுக்காக பொதுநல வழக்குகள் தொடரப்படுவதை முறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காகவும் சுய விளம்பரம் தேடியும் இவ்வாறு வழக்குகள் தொடரப்படுகின்றன. ஏழைகளுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தரவே பொதுநல மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும். என்று அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் விதித்த அபராதத்தைவிட அதிகமாக ரூ.75,000 சேர்த்து ரூ.1 லட்சம் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*