காஷ்மீரில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு

பிறப்பு : - இறப்பு :

காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் ராணுவ வீரர் ஒருவரின் உடல் சனிக்கிழமை அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரரான இர்ஃபான் அகமது மிர் தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்டுள்ளார். 23 வயதான அவரின் உடல் வாட்முல்லா கீகாம் பகுதியில் உள்ள பழத்தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மெஹ்பூபா, உமர் கண்டனம்

இர்ஃபானின் படுகொலைக்கு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”இர்ஃபான் அகமது கொடூரமாகக் கொல்லப்பட்டதற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.

இத்தகைய கொடிய செயல்கள் மூலம் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்கான எங்களின் முயற்சிகள் பலவீனம் அடையாது” என்று கூறியுள்ளார்.

இதேபோல காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் இர்ஃபானின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit