ஜெயலலிதாவின் நினைவு நாளில் அமைதி ஊர்வலம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

j

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்தவுள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு அ.தி.மு.க. என்ற பெயரில் ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இணைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நினைவு நாள் அமைதி ஊர்வலம் அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஜெயலலிதாவுக்கு மலரஞ்சலி செலுத்தப்படும் எனவும் அதன்பின் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit