மாவீரர்…. காலங்கள் கதை சொல்லும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மாவீரர்….
காலங்கள் கதை சொல்லும் அறிவோம் நாம்
கார்த்திகை என்றாலே கருவறை கருகி அழும்
காவியப்பூக்களாம் எங்கள் நாயகர் எண்ணி
கண்ணீர் கரையின்றிஓடக் காத்திருப்போம்-
துயிலுமில்லமதில்….

தேடித் தேடி வந்தோம் தென்படவில்லை நீவிர்
கூடித்திரிந்த தோழர் குரலும் அடங்கியதேனோ
வேட்டுச்சத்தம் உம்மை வெறியாய் முன்னெடுத்துப்போக
வீட்டுத்தெருவில் உன் சேதி காட்டுத்தீயாய்ப் பரவ…

னேற்றுச்சுமந்தது போல என் வயிறு துடிக்குதே
பார்த்து வளர்த்த உன் மேனி கருகும் மணம் வருகுதே
நாத்து வயலில் நட்டால் நல்ல பயன் வேண்டுமே
காத்து வந்த கருவறை மண்மீட்பால் குளிக்குது மாவீரரே…

விடுதலைப்போராட்டம் உங்கள் உணர்வில் ஊறியது
வியந்தது உலக தேசம் உங்கள் வெற்றி கண்டு
விழித்து விறுவிறுப்புடன் விரைந்து தீட்டிய சதியால்
வீரத்தின் மறுபிறப்புகளே எம் மாவீரரே விதையானீர்…

விடியல் வெகுதூரமில்லை விழித்தெழக் கனகாலமில்லை
விதைத்தது உங்கள் இனுயிரைச் செல்வங்களே
விளைந்து பயன் தர காத்திருப்போம் கார்த்திகை மலர்களே
வீணாகாது நீர் சிந்திய குருதி குத்துவிளக்கில் எண்ணெயாய்
எரிகிறது எம் மாவீரச்செல்வங்களே…..

விரைந்து ஒன்று சேர்வோம் தமிழர்களே
வீணாகாது ஒற்றுமையால் தமிழீழம் வென்றெடுப்போம்
வாரீர்
எம் மாவீரச்செல்வங்களின் கனவு நனவாகும் வரை
சேர்ந்திருப்போம் ஒற்றுமை வேதம் சுமந்து…

கவி ஆக்கம் …ர்மீந்திராணி அருட்செல்வம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*