விடுதலைப்புலிகள் காலத்தில் காவல்துறைக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விடுதலைப்புலிகளின் காலத்தில் காவல் துறைக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இருந்தது என பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று(23) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இ்நத நிகழ்வில் வட மாகாண சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ரி.கணேசநாதன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலீஸ் நிலையங்களின் பொறுபதிகாரிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் அதிகாரிகள் ஆகியோா் கலந்துகொண்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம் பெறுகின்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல் சட்டம் ஒழுங்கை பேணுதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன. இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளின் குறிப்பாக கிராம, மாவட்ட மட்டங்களின் சிவில் பாதுகாப்பு குழுக்களின் பங்களிப்பின் அவசியம் பற்றியும் அவா்களின் ஒத்துழைப்பு குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒன்றாகும் எனவும் வட மாகாண சிரேஸ்ட பொலீஸ் அதிகாரியினால் வலியுறுத்தப்பட்டது.

இதன் போது கலந்துகொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்தனா். அவ்வாறு கருத்து தெரிவிக்கும் போதே விடுதலைப்புலிகளின் காலத்தில் பொது மக்களுக்கும் அதன் காவல்துறையினருக்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்பட்டது இது குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் தற்போது காவல்துறைக்கும் பொது மக்களுக்குமான உறவில் இடைவெளி காணப்படுகிறது. அதற்கு மொழியும் ஒரு தடையாக இருக்கிறது. இதனை கருத்தில் எடுக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*