சிரியாவில் அமைதி : ஈரான் ரஷ்யா, துருக்கி கூட்டாக ஒப்புதல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

wright-syria3

மாஸ்கோ: சிரியாவில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா,- ஈரான்,- துருக்கி நாடுகள் கூட்டாக முயற்சி மேற்கொண்டுள்ளன.
சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ரசாயன ஆயுதங்களும் பிரயோகிப்பட்டதால், லட்சகணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ரஷ்யா,- ஈரான் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக சிரிய அதிபர் பசார் அல் ஆசாத், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்.

பின்னர் ஈரான் அதிபர் ஹூசைன் ரவுகானி, துருக்கி அதிபர் ரீசெப் தைப்பி ஈர்டோகன் ஆகியோர் ரஷ்யா சென்று சோச்சி மாகாணத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினர். மூவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
இதில் சிரியாவில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வரவும் அமைதி ஏற்படுத்தவும் இதற்காக ஒரு மாநாட்டை நடத்தி முக்கிய தீர்மானம் கொண்டுவருவது எனவும், இதில் எதிர்கட்சியினர், ஆயுத குழுக்களுடன் பேச்சு நடத்திட ஒப்புக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit