மாயமான நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியதா? வெளியான பகீர் தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மாயமான நீர்மூழ்கி கப்பல் தொடர்பில் அமெரிக்க கடற்படை பதிவு செய்த விசித்திர ஒலியானது, குறித்த கப்பல் வெடித்துச் சிதறியதின் ஒலியாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை அர்ஜென்டினா கடற்படை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் 44 ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

அர்ஜென்டினா கடற்படை செய்தி தொடர்பாளர் இது குறித்து தெரிவிக்கையில், தென் அட்லாண்டிக் கடற்பகுதியில் கடந்த 15-ஆம் திகதி குறித்த அதிர்வுகளை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இது அசாதாரணமானது, மிக குறுகியது, கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி அணு ஆபத்து அற்றது என விளக்கம் அளித்துள்ளார்.

நேற்றைய தினம் அமெரிக்க கடற்படையால் நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் இருந்து வெப்பம் பதிவானதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,

அர்ஜென்டினா கடற்படை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 8 தினங்களுக்கு முன்னர் இதே பகுதியில் குறித்த நீர்மூழ்கி கப்பலில் இருந்து சமிக்ஞை வெளியானது.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த சான் ஜுவான் என்ற நீர் மூழ்கிக் கப்பல் 44 ஊழியர்களுடன், தென் அட்லாண்டிக் கடலில் மின்சாரக் கோளாறு காரணமாக தொடர்பை இழந்தது.

இதனைத் தொடர்ந்து அக்கப்பலையும், அக்கப்பலில் இருந்த ஊழியர்கள் 44 பேரையும் தேடும் பணியில் அர்ஜென்டினாவுக்கு உதவ பிரேசில், சிலி, கொலம்பியா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் களம் இறங்கின.

எனினும் கப்பலைக் கண்டுபிடிக்க முடியாமல் அர்ஜென்டினா கப்பற்படை திணறியது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*