ஒபாமாவை கொல்ல தபால் வெடிகுண்டு அனுப்பிய பெண்: வெளியான பகீர் தகவல்

பிறப்பு : - இறப்பு :

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவை கொல்ல தபால் வெடிகுண்டு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பெண், டெக்சாஸ் ஆளுநருக்கு அனுப்பிய தபால் வெடிகுண்டால் மீண்டும் சிக்கியுள்ளார்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் குடியிருந்து வரும் ஜூலியா பாப் என்பவரே, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட மூவரை கொல்ல தபால் வெடிகுண்டு அனுப்பிய வழக்கில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

தற்போது 46 வயதாகும் ஜூலியா, ஒபாமாவுக்கு அனுப்பியது போன்றே டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் பெயரிலும் அனுப்பியுள்ளார்.

ஆனால் ஆளுநர் தபாலை திறந்த பின்னரும் அதில் பொருத்தியிருந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

குறித்த தபாலில் ஜூலியாவின் உண்மையான முகவரியை இணைத்திருந்ததன் அடிப்படையிலேயே பொலிசார் ஜூலியாவை கைது செய்துள்ளனர்.

ஒபாமாவுக்கு அனுப்பிய வெடிகுண்டு தபாலில் பூனை முடிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜூலியாவின் செல்லப் பிராணியான பூனை ஒன்றுடன் ஒத்துப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்மணியின் 3-வது இலக்கு சமூக பாதுகாப்பு நிர்வாக ஆணையர் கரோலின் கொல்வின் என தெரிய வந்துள்ளது.

3 வெடிகுண்டிலும் குறித்த பெண்மணி ஒரே மாதிரியான ரசாயன பவுடரை பயன்படுத்தியுள்ளார். எப்.பி.ஐ அதிகாரிகள் இவரது வீட்டை சோதனைக்கு உட்படுத்தியபோது அங்கிருந்து Pyrotechnic ரசாயன பொடி கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்குகளின் விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் முதற்கொண்டு தொடங்க உள்ளதாகவும், அதுவரை அவர் நீதிமன்ற காவலில் இருப்பார் எனவும் தெரிய வந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பிய தபால் வெடிகுண்டு உள்ளிட்ட மூன்றும் வெடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit