
ஆபகானிஸ்தானில் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்ட 15 ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தலையை சக போராளிகளே வெட்டி தண்டனை அளித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலபாத் பகுதியில் தற்கொலை படை தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உடல் சிதறி கொல்லப்பட்ட நிலையில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
தேசத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து காணப்படுவதையே குறித்த இரு நிகழ்வுகளும் சுட்டிக்காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Nangarhar மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய நபர் தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு ஆதரவாக குழுமியிருந்த மக்களிடையே இந்த கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள குறித்த மாகாணமானது கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்தே ஐ.எஸ் பயங்கரவதிகளின் கோட்டையாக இருந்து வருகிறது.
இந்த மாகாணத்தில் தான் 15 ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்கள் சக வீரர்களால் கழுத்தை துண்டித்து கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் சிரியா மற்றும் ஈராக் நாட்டவர்களும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து வெளியெற திட்டமிட்டிருந்த சிலரை தண்டித்துள்ளதாக குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Nangarhar மாகாணத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் தாலிபான் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.