உங்களது பேஸ்புக் கணக்கு சதிவலைக்குள் சிக்கியதா? இதோ கண்டுபிடிக்கலாம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் மிகப் பெரிய ஒன்லைன் விளம்பர ஊடகமாகவும் காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்ட சில சதிவேலைகள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன.

அதாவது ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அரசியல் ரீதியான விளம்பரங்களை பேஸ்புக்கின் அனுமதி இன்றியே அத்தளத்தில் மேற்கொண்டிருந்தன.

இவ் வேலைகளை செய்து கொடுப்பதற்காக சில இணையத்தள ஏஜன்சிக்களும் முன்வந்திருந்தன.

குறித்த இணையத்தள ஏஜன்சிகளால் உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களை தாம் லைக் செய்துள்ளார்களா என்பது பற்றி அனேகமான பேஸ்புக் பயனர்களுக்கு இதுவரை தெரியாது.

எனவே இது தொடர்பில் ஒவ்வொரு பயனர்களும் அறிந்துகொள்வதற்காக டூல் (Tool) ஒன்றினை பேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது.

Facebook Help Center பகுதியில் தரப்படவுள்ள இந்த டூலின் ஊடாக 2015ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை பயனர்கள் தாம் லைக் செய்த பேஸ்புக் பக்கங்கள் தொடர்பாக அறிந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இவ் வசதி இவ்வருட இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*