அனைத்து குளங்களையும் விவசாயிகளின் நலன் கருதி புனரமைக்குமாறு இராதாகிருஷ்ணன் கோரிக்கை!!

பிறப்பு : - இறப்பு :

இலங்கையிலுள்ள அனைத்து குளங்களையும் விவசாயிகளின் நலன் கருதி புனரமைக்குமாறு விவசாய அமைச்சிடம் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக மலையகத்தில் குளங்களை புனரமைப்பதன் ஊடாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நீரைக் கொண்டு செல்ல இலகுவாக இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2018 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் குழுநிலை விவாதத்தின் ஐந்தாம் நாள் விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

அதன் போது உரையாற்றும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் எமது நாட்டில் நச்சுத் தன்மையற்ற விவசாயத்தினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு விவசாயத்துறையில் புதிய தொழில்நுட்பத்தினை எமது நாட்டிற்கு அறிமுகம் செய்து வைப்பதன் மூலம் உற்பத்திச் செலவை குறைத்துக்கொள்ள முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் போது விவசாயிகளின் உற்பத்தி செலவை அதிகரிக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு ஏற்ற விலை கிடைக்காமல் போவதால் பெரும் பொருளாதார நட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு மலையகத்திலுள்ள விவசாயிகளின் உருளைக்கிழங்கு உற்பத்திகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்று கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் மத்திய மாகாணத்தில் மாத்திரமன்றி ஊவா மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது.

கிழங்கின் மீதான வரி நீக்கம் காரணமாக விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் உருளைக்கிழங்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மலையக விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் விபரித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit