கார்த்திகையே பூத்ததென்ன கார்த்திகையே….

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தோன்றில் புகழொடு தோன்றுக
வள்ளுவன் குறுகத்தறித்த குறளினை
வல்லவர் வாழ்ந்து காட்டியவர்
வாகை பல்லாயிரம் சூடியவர்…

வானளந்த ஆண்டவனும் அதிசயிப்பான்
மானமா வீரரின் செயல் கண்டு விழித்திடுவான்
கோழைகள் என்றே கிடந்தவரல்ல
கொட்டும் குண்டு மழையிலும் குளித்தவர்கள்…

வேரோடும் நிலமெல்லாம் வெற்றிப்
புகழோடு களமாடியவர்
ஆழ்கடல் யாவிலுமே ஆண்ட பகை
முடித்துக் கரை சேர்ந்தவர்

தமக்கான வாழ்வைக் கொன்று
எமக்காக உரமானவர்
உறவான தாய் பூமியை
உளமார நேசித்த்வர்

ஈரடியால் மூவுலகளந்த வாமணனாய்
இமைப் பொழுதும் தூங்காது மண் காத்தவர்
செங்காந்தள் மலராகியே
தேச வெளியெல்லாம் படர்கின்றவர்…

கந்தகக் குண்டினையும்
சந்தணமாகப் பூசியவர்
செந்தணலாகியே தேச வாசலெங்கும்
ஒளி தந்தவர் ஓவியமாக நிலைத்தவர்…

மண்ணுக்குள் விதையானவர்
மரணமும் மரணிக்க வைத்தவர்
இறவாத புகழானவர் எம் இமைக்குள்
வரலாறாகி உறைந்து போனவர்…

கதையல்ல உண்மையானவர்
களங்கமற்ற புனிதரானவர்
வணக்கத்துக்குரிய மாமனிதரானவர்
தமிழர் வாழ்வியலை வரைந்த காவியமானவர்…

லலிதா லக்ஷ்மணன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*