பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரும் கூட்டு எதிர்க்கட்சி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ranil-and-sambanthan

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி, கூட்டு எதிர்க்கட்சிக்கு பிரதமர் பதவியையோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையோ வழங்கினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் விசேட குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

50க்கு 50 வேட்பாளர்களை கொண்ட வேட்புமனுக்களை தயாரிப்பது உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் முன்வைத்துள்ள சில விடயங்கள் குறி்த்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தற்போதைய தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் வரை எந்த விடயங்களை அடிப்படையாக கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில்லை எனவும் இதன் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுமக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்து கடும் அதிருப்தி காணப்படுவதால், அதில் பங்காளியாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அறிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மேலும் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit