
பிரபல தொலைக்காட்சியில் ஒரு சீரியலின் நாயகியாக நடித்து பல தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் பிரியா.
இவர் அந்த சீரியலுக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட போகிறார் என்று வந்த தகவல் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. ஆனால் அவர் மேயாத மான் என்ற படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
தற்போது இவர் நிறைய படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் இவருக்கு சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் ஒரு பிரச்சனை வந்துள்ளது.
அதாவது வழக்கமாக சினிமா பிரபலங்களின் டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்படுவது போல் இவருடைய பக்கமும் ஹாக் செய்யப்பட்டிருக்கிறதாம். இதனை அவரே மற்றொரு டுவிட்டர் பக்கம் மூலம் கூறியுள்ளார்.
Sorry guys as my other account is been hacked 😒 stay tuned in this 🙏🏻 pic.twitter.com/YoAZW7ASgs
— Priya Bhavani Shankar (@Priyabshankar_) November 22, 2017