டென்னிஸ்ஸில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 1000 ஆமாவது வெற்றியை எட்டி சாதனை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 33 வயதுடைய ரோஜர் ஃபெடரர் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் கனடாவின் மிலோஸ் ரவோனிக்கை வெற்றி கொண்டதன் மூலம் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தனது 1000 ஆமாவது வெற்றியைப் பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும் பிரிஸ்பேனில் இவர் பெற்ற வெற்றியின் மூலம் 83 பட்டங்களையும் இவர் சுவீகரித்துள்ளார். ரோஜர் ஃபெடரர் 1998 ஆம் ஆண்டு பிரான்ஸின் குலாவ்மி ராவ்க்ஸுக்கு எதிராக முதலாவது வெற்றியைப் பெற்றதில் இருந்து இவரது இந்த சாதனைப் பயணம் தொடங்கியுள்ளது. இதற்கு முன் இச்சாதனைகளை அமெரிக்காவின் ஜிம்மி கானோர்ஸ் (1253 வெற்றி) மற்றும் இவான் லென்டில் (1071 வெற்றி) ஆகியோரே தொட்டுள்ளனர். எனினும் ரோஜர் ஃபெடரர் இவர்களது சாதனைகளையும் முறியடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. தற்போது உலக டென்னிஸ் தர வரிசையில் ரோஜர் ஃபெடரர் 2 ஆவது இடம் வகிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபெடரர் இதுவரை ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 17 கிராண்ட் சிலாம் (4 ஆத்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்சு ஓப்பன், 5 அமெரிக்க ஓப்பன், 7 விம்பிள்டன்) பட்டங்களை வென்றுள்ளார். இதன் மூலம் 14 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற பீட் சாம்ப்ரசின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார். தவிர நான்கு (ஆத்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா) இடங்களிலும் கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற ஏழு ஆண் வீரர்களுள் ஒருவராவார். 22 முறை கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிகளில் ரோச்யர் பெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையாகும்.

பெடரெர் பல்வேறு வித தொண்டூழியப் பணிகளைச் செய்து வருகிறார். அவர் 2003-ஆம் ஆண்டு ரோச்யர் பெடரெர் அறநிறுவனத்தை அமைத்து பொருளாதாரத்தில் பின்பற்றிய மக்களுக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார். 2005-ஆம் வருடம் காத்ரீனா புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவும் விதமாக அவ்வாண்டு யுஎசு ஓபன் போட்டியில் பயன்படுத்திய மட்டைகளை ஏலம் விட்டார். 2004—ஆம் வருடம் யூனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். அதன் பின், அவர் இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி பாதித்த தமிழ்நாட்டின் பகுதிகளை பார்வையிட்டார். மேலும் யூனிசெப்பால் நடத்தப்பட்ட எய்ட்சு விழிப்புணர்வு கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். 2010-ஆம் வருடம் ஃகையிட்டி (Haiti) நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் அவ்வாண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் பயிற்சி ஆட்டங்களின் கடைசி நாளன்று, ஃகிட் ஃபார் ஃகையிட்டி (Hit For Haiti) எனும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினார். அதில் அவருடன் உடன்பணியாற்றும் வீரர் வீராங்கனைகளான ரபேல் நடால், நோவக் ஜோகோவிச், ஆண்டி ராடிக், லெயுட்டன் ஹெவிட், கிம் கிளைஸ்டர்ஸ், செரீனா வில்லியம்ஸ் மற்றும் சமந்தா ஸ்டோசர் ஆகியோர் பங்கேற்ற ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் மூலம் கிடைத்த வருமானம் முழுவதும் ஃகையிட்டி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*