வேராகி விழுதானவர்……

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வேராகி விழுதானவர் மாவீரர்
ஊரெல்லாம் உறவானவர்
தீயாகிப் பொறியானவர்
தீர தீரராகப் பெயர் பொறித்தவர்…

களமாடி வென்றானவர்-எதிரி
உள்ளமெல்லாம் பயம் மூட்டியவர்
கணையாகி திசையாவுமே
சுடுகுழாகி பகை வென்றவர்….

வீரத்தை விதைத்தவர்-பகை
முடித்துமே பரணி பாடியவர்
வாகைகள் தினம் சூடியே
வாழ்வியலை அளந்தவர்..

அனல் கக்கும் விழியோடுமே
ஆதி மொழி காக்கப் புறப்பட்டவர்
காவலரண் யாவுமே காவல்
காத்திட்ட சக்தியானவர்…

புகழ் பாடக் கார்த்திகையே
நீ மலர்ந்திட்டாய் புவி தனிலே
நீங்காத காவியரை நினைவெல்லாம்
நிதம் போற்ற கவியோடு வந்தோமே..

அழியாத புலி வீரம்
அகலாத அற நெறி
புயலான புது வேதம்
புரட்சி செய்தது உம் நாதம்…
வேராகினீர் எம் தேசத்தின்
ஆணிவேராகினீர்
அணையாத தீபமாகினீர்-உமைப்
பாடாத நாட்களெல்லாம் நாம்
வாழாத நாட்களாகும்…

கார்த்திகா முரளிதரன்

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*