கல்லறை மேனியர்……

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கார்த்திகை மைந்தர்களே !
காவிய மறவர்களே !
கார்த்திகை மலர்ந்தது – உங்கள்
காத்திரக் கனவுகள் சுமந்து !
கார்த்திகை சுடரொளியில்
ஒளிர்கிறது தியாகங்கள் …
வேள்வித்தீயின் ஒளிக்கீற்று
வியாபிக்கிறது தேசமெங்கும் !
கனக்கும் இதயத்தில்
நினைவோடு நிறைந்தவரே ;
கண்ணீரும் உதிர்கிறதே
புனிதர்களே உம் நினைவால் !
சுதந்திர தாகம் கொண்டு
சுமைகளை சுகமாய் சுமந்து
சுந்தரத் தமிழ்த்தாயை
சுவாசித்தீர் மூச்சாக ஏற்று !
செந்தணல் வீச்சுக்களில்
செங்குருதி பாய்ந்தோட
கடைசி மூச்சு உள்ளவரை
காவல் இருந்தீர் தமிழ் மானம் !
பற்றுதலை முற்றும் விடுத்து
விடுதலையை பற்றிக்கொண்டு
வீழ்ந்திடாத வீரம் கண்டு
இனத்துக்காய் இன்னுயிர் தந்தீர் !
சாவினை மாலையாக ;
கழுத்திலே அணிந்தீரே …
மரணத்தையும் வென்றீரே …
மாவீர சரித்திரவான்களே !
உள்ளத்து உணர்வுகளை
மௌனத்தின் மலராக்கி …
பாதங்களில் அர்ச்சிக்கின்றோம் ;
இதயத்தில் வாழ்ந்திடுவீர் !!!

-வேலணையூர் ரஜிந்தன்.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*