5 வயது சிறுமிக்கு மாதவிடாய்: பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் பரிதாபம்

பிறப்பு : - இறப்பு :

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு அவர் உடல்ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார்.

New South Wales – ஐ சேர்ந்த Emily Dover என்ற சிறுமி பிறக்கும்போது நல்ல ஆரோக்கியமாக பிறந்துள்ளார். இந்த சிறுமிக்கு 4 வயது ஆகியபோது மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.

தற்போது, இந்த சிறுமிக்கு 5 வயதாகிறது. Emily- க்கு இரண்டு வயது இருக்கும்போதே மார்பகங்கள் வளர்ந்து முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்துள்ளன.

4 வயதிலேயே பார்ப்பதற்கு மிகவும் முதிர்ச்சியடைந்து காணப்பட்டுள்ளார். மருத்துவமனையில் கொண்டுபோய் சோதனை செய்ததில் இவருக்கு Addison’s disease இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அட்ரீனல் சுரப்பியானது, ஸ்டீராய்டு ஹார்மோன், கார்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டிரோன் ஹார்மோன்களை குறைந்த அளவே சுரக்கும். இது குறிப்பாக இளம் வயது பெண்கள் அல்லது 30 வயது பெண்களுக்கு ஏற்படும்.

சில நேரங்களில் சிறு வயதிலேயே பெண்கள் பருவமடைவதற்கும் காரணமாக அமைகின்றன.

தற்போது Emily Dover – எடை அதிகரித்துள்ளது. இவரது உடம்பில் அதிகமாக முடி வளர்ந்து காணப்படுவதால் பள்ளிக்கு செல்வதற்கு சிரமப்படுகிறார்.

மேலும் இவரது உடலில் துர்நாற்றம் வீசுவதால், சிறு குழந்தைக்கான பருவத்தினை எனது மகளால் அனுபவிக்க முடியவில்லை என தாய் Tam கூறியுள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit