சர்வதேச கிரிக்கெட்டில் 50வது சதம்: கோஹ்லி புதிய சாதனை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதத்தை எட்டியுள்ளார், இதன் மூலமாக 100 சதங்களை அவர் விரைவில் எட்டிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி தனது 18-வது சதத்தை அடித்துள்ளார்.

இதன் மூலமாக ஒருநாள் போட்டியில் அடித்த 32 சதங்களுடன் சேர்த்து மொத்தமாக 50 சதங்களை அடித்துள்ளார்.

துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் 29 வயதான கோஹ்லி, இதே போல விளையாடினால் சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

ஓர் ஆண்டில் அதிக சதங்களை எடுத்தவர்களின் பட்டியலில் கோஹ்லி இணைந்துள்ளார். 9 சதங்களை கோஹ்லி ஓர் ஆண்டில் அடித்துள்ளார்.

50-வது சர்வதேச சதங்களை விரைவாக எடுத்த வீரர்கள்
 • 348 இன்னிங்ஸ்கள் – ஆம்லா / கோஹ்லி
 • 376 இன்னிங்ஸ்கள் – சச்சின் டெண்டுல்கர்
 • 420 இன்னிங்ஸ்கள் – ரிக்கி பாண்டிங்
 • 465 இன்னிங்ஸ்கள் – பிரையன் லாரா
அதிக சர்வதேச சதங்கள் அடித்தவர்கள்
 • 100 – சச்சின் டெண்டுல்கர், 782 இன்னிங்ஸ்கள்
 • 71 – பாண்டிங், 668 இன்னிங்ஸ்கள்
 • 63 – சங்கக்காரா, 666 இன்னிங்ஸ்கள்
 • 62 – காலிஸ், 617 இன்னிங்ஸ்கள்
 • 54 – ஆம்லா, 384 இன்னிங்ஸ்கள்
 • 54 – ஜெயவர்தனே, 725 இன்னிங்ஸ்கள்
 • 53 – லாரா, 521 இன்னிங்ஸ்கள்
 • 50 – விராட் கோஹ்லி, 348 இன்னிங்ஸ்கள்
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*