தாயகக் கனவுடன் பாய்ந்த புலிகள்

பிறப்பு : - இறப்பு :

மாவீரர்கள்

தாயகக் கனவுடன் பாய்ந்த புலிகள்
தாய் மண் காத்த மாவீரர்கள்

விழியில் தீ நீர் சுமந்து
பலமாய் களத்தில் கலந்து

மனதில் தலைவரின் சிந்தனையைத் தாங்கி
கரங்களில் மாற்றானை எதிர்கொள்ள ஆயுதம் ஏந்தி

உயிர் கொடுத்துப் போராடினீர் எமக்காக
தமிழராய் தாயகம் மீட்போம் உமக்காக

குருதி சிந்திய போர்க்களம் அன்று
ஆதாரம் கொண்ட பேச்சுக்களம் இன்று

தரையிலும் வானிலும் கடலிலும் நீர் காத்த தாயகம்
கண்ணீரிலும் குருதியிலும் மூச்சிலும் உம் ஞாபகம்

மொழியால் இணைந்த இனமாம்
உம்மால் வாழும் தமிழராம்

எம் புனிதத் தாய்மண்ணை அடக்க வந்தது வையகம்
கலை கலாச்சாரம் பண்பாடு கொண்டவர் என்கிறது இன்று அதே வையகம்

உமக்கெனச் சுடரேற்றுகிறோம்
உள்ளத்தால் உருகிநிற்கிறோம்

அன்னியன் ஆயுதம் உங்களைப் பார்த்தஞ்சும்
மரணம் கூட உங்களிடம் கெஞ்சும்

எம் தேசத்தின் விடிவிற்காய் என்றும் போராடுவோம்
உம் எல்லை மீறிய தியாகத்திற்காய் என்றும் உம்மைப் போற்றுவோம்

தம் கல்லறை மீது யாம் சத்தியம் செய்வோம்
விழ விழ தாண்டவம் கொண்டெழுவோம்

எங்கு போனீர்கள் எங்கள் மாவீரச்செல்வங்களே
எம் தமிழீழம் தந்த கண்மணிகளே

தங்கம் உருக்கிட மின்னுவது போல்-தியாகத்தின் சிகரமாய்
நாம் ஏற்றும் கார்த்திகைத் தீபத்தில் எண்ணற்ற காலம் மின்னுவீர்

உம்மை நாம் எவ்வாறு மறப்போம்
எம் தாயகத் தெய்வங்களே

உம் நினைவுகளோடும் கனவுகளோடும்
விடிவை நோக்கிப் புதிய பரணி பாடுவோம் மாவீரர்களே…..

தமிழரின் தாகம்…….
தமிழீழத் தாயகம்…….

நன்றி
வணக்கம்🙏

ஹர்ஷா பாலகுமரன்

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit