கீல்வாதம், முடக்குவாதம் வலியை போக்க இதை செய்யுங்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

excerciseff

சுப்த பாதாங்குஸ்தாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு, முழங்காலின் தசைகள் வலிமையாகி கீல்வாதம் மற்றும் முடக்குவாதம் போன்ற வலிகள் வராமல் கட்டுப்படுத்த உதவுகிறது.

சுப்த பாதாங்குஸ்தாசனம் செய்வது எப்படி?

முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில், கைகளையும் கால்களையும் நீட்டி, வலது காலின் கணுக்கால் தரையில் அழுந்தியவாறு இருக்க வேண்டும்.

அதன் பின் இடது கை பெருவிரலால், இடதுகாலை மேலே உயர்த்திப் பிடித்திக் கொண்டு இடது கை நேராக உயர்த்தி காலை பிடிக்க வேண்டும்.

இப்பயிற்சியை செய்யும் போது இடுப்பு, தோள்கள் ஒரே நேர்க்கோட்டில் விரைப்புடன் இருக்க வேண்டும். அதன் பின் மெதுவாக கைகளையும் கால்களையும் தளர்த்தி ஆரம்ப நிலைக்கு வந்து, இதேபோல் மறுபக்கமும் செய்ய வேண்டும்.

பலன்கள்
  • இடுப்பு மண்டலத்தை சீராக்கி, கீழ் முதுகுப்பகுதி தளர்வடைகிறது.
  • கீல்வாதம் மற்றும் முடக்குவாதத்தினால் ஏற்படும் வலிகள் கட்டுப்படுத்துகிறது.
  • இடுப்பு மற்றும் கீழ் முதுகுத்தண்டு இணைப்பு எலும்புகள் வலிமையாகி இடுப்புவலி குறையும்.
  • மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் இடுப்பு வலி ஏற்படாது.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit