சந்திரனுக்கு அணுச் சக்தியில் செயற்படும் ராக்கெட்: சீனாவின் விஷப் பரீட்சை

பிறப்பு : - இறப்பு :

விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுக்கள் இதுவரை திரவ ஒட்சிசன், நைட்ரஜன் ட்ரை ஒக்சைட் மற்றும் ஹைட்ரஜன் பேர் ஒக்சைட் ஆகிய எரிபொருட்களிலேயே இயங்கி வந்தன.

ஆனால் முதன் முறையாக அணு சக்தியில் இயங்கக்கூடிய ராக்கெட்டினை சந்திரனுக்கு அனுப்பவுள்ளதாக சீனா தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கான திட்டமிடல் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 2040ம் ஆண்டளவில் இத் திட்டம் செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2045ம் ஆண்டளவில் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையில் சீனா சிறந்த போக்குவரத்து முறைமைய கட்டியெழுப்பியிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2030ம் ஆண்டு காலப் பகுதியில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்பும் திட்டத்தினையும் சீனா கொண்டிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit