மனிதர்களைப் போல் சிட்டுக்குருவிக்கு இறுதிச்சடங்கு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள இடிகரை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது வீட்டின் தோட்டத்தில் சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடத்தை ஏற்படுத்தியிருந்தார். இங்கு, வைக்கப்பட்டுள்ள பானைகளில் ஏராளமான சிட்டுக்குருவிகள் வசிக்கின்றன.

இந்நிலையில், தண்ணீர் தொட்டிக்கு மேல், சிட்டுக்குருவி ஒன்று கூடுகட்டி மூன்று குஞ்சுகளை பெரித்தது. இந்தத் தாய் சிட்டுக்குருவி, தினமும் வெளியே சென்று குஞ்சுகளுக்கு இரை தேடி பாசத்துடன் ஊட்டி வளர்த்து வந்தது.

நேற்று முன்தினம் குஞ்சுகளுக்கு இரை தேடி தாய்க்குருவி சென்றது. அப்போது, கூட்டில் இருந்த குஞ்சு ஒன்று எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்து போனது.

இறந்து போன குஞ்சை செல்வராஜ், வெளியே எடுத்து சுவர் மீது வைத்துவிட்டு தாய்க்குருவி வருகைக்காக காத்திருந்தார். குஞ்சு இறந்து போனதை அறியாத தாய்க்குருவி, தாய்மை உணர்வுடன் அதற்கு இரை அளிக்க முயன்றது. ஆனால், குஞ்சு வாயைத் திறந்து இரையை பெறவில்லை. அப்போதுதான் தாய்க்குருவிக்கு குஞ்சு இறந்து போனது தெரியவந்தது.

இதனால்,தாய்க்குருவி சோகத்தில் ஆழ்ந்தது. நடந்த சம்பவத்தை செல்வராஜூம் கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து, இறந்துபோன சிட்டுக்குருவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த செல்வராஜ் குடும்பத்தினர் முடிவு செய்தனர். சிட்டுக்குருவி உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. குஞ்சு அடக்கம் செய்யப்பட்டதை தாய்க்குருவி சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

செல்வராஜ் கூறுகையில், ” இறந்து போன குஞ்சுக்கு தாய்க்குருவி உணவு ஊட்ட முயன்றதைப் பார்த்து எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அன்பு பாசம் அனைவருக்கும் பொதுவானது. ஒரு சிட்டுக்குருவின் இழப்பு ஒரு குழந்தையின் இறப்புக்குச் சமமானதுதான். சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தை மனித சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*