ஜிம்பாப்வே அதிபரை ஆட்டி வைக்கும் பதவி ஆசை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பதவி விலகக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையிலும் ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் ராபர்ட் முகாபே தனது பதவியில் விடாப்பிடியாக இருக்கிறார்.

ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 37 ஆண்டுகளாக ராபர்ட் முகாபே தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. 93 வயதான இவர் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டில் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முகாபே தனக்குப் பின் தனது 52 வயது மனைவியை அதிபராக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே, இவரை அந்நாட்டு ராணுவம் சில நாட்களுக்கு முன்பாக வீட்டுக்காவலில் வைத்தது.

இதனைடுத்து முகாபே தான் நிறுவிய ஜானு பி எஃப் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். மேலும், திங்கட்கிழமை பதவி விலகாவிட்டால் கட்சியின் அதிருப்திக்கு ஆளாக நேரும் என்றும் அவரது கட்சியின் மற்ற தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சூழலில், அந்நாட்டு அதிகாரப்பூர்வ் செய்தித் தொலைகாட்சியில் உரையாற்றிய முகாபே, இனி அனைத்து மட்டங்களிலும் மீள்பார்வை செய்யப்படும் என்று தெரிவித்தார். கடந்த காலத்தின் தோல்விகள் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார். ஆனால், தனது ராஜினாமாவை அறிவிக்கவில்லை.

இந்த உரையின் போது முகாபே பதவி விலகுவதாக அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியானதால் பொதுமக்கள் ஏராளமானவர்கள் பொது இடங்களில் கூடி கொண்டாட்டத்திற்குக் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*