கெயில் மீண்டும் அதிரடி; வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது இருபது ஓவர் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஜோகன்னஸ்பர்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வென்றது. 20 ஓவர் ஆட்டங்களில் அதிகபட்ச “ரன் சேஸ்’ இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 56 பந்துகளில் 5 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் விளாசினார்.

இமாலய இலக்கைத் தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 41 பந்துகளில் 7 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 90 ரன்களும், மார்லன் சாமுவேல்ஸ் 39 பந்துகளில் 2 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 60 ரன்களும் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 2-0 என கைப்பற்றியது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*