நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவினால் மகிழ்ச்சி அடைந்துள்ள புலம்பெயர் தமிழர்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை இராணுவ தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதுகுறித்து புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நாவற்குழி பிரதேசத்தில் தமிழ் இளைஞர்கள் சிலர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்கவை, யாழ். நீதிமன்றத்தில் முன்னிலை ஆகுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

இளைஞர் காணாமல் போனமை தொடர்பில் 21 வருடங்களின் பின்னர் இராணுவ தளபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடபகுதியில் செயற்படும் அரச சார்பற்ற அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இராணுவ தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இராணுவ தளபதியை நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டமை இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முக்கியமான விடயம் என ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*