வவுனியாவில் வீதி புனரமைப்புக்காக கொட்டப்பட்ட மண்ணால் மக்கள் சிரமம்!

பிறப்பு : - இறப்பு :

road vavuniya

வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட திருநாவற்குளம் முதலாம் குறுக்கு தெருவில் புனரமைப்பிற்காக கொட்டப்பட்ட மண்ணால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பருவமழை தொடங்கியுள்ள காலகட்டத்தில் வீதி புனரமைப்புக்காக கொட்டப்பட்ட மண்ணாணது கடந்த ஒரு மாத காலமாக சீர்செய்யப்படாமையால் மக்கள் பயணம் செய்ய பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

திருநாவற்குளம் வீதியானது கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பாக திருத்த வேலைகளை ஆரம்பித்த ஒப்பந்தக்காரர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டால் பாடசாலை செல்லும் மாணவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் வயோதிபர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

150 குடும்பங்களைச்சேர்ந்த 500 பேருக்கு மேற்பட்டவர்கள் இவ்வீதியை பயன்படுத்தி வருவதுடன் வாகனங்கள் சென்று வர எந்தவிதமான வழிகளும் இல்லாத நிலையில் இவ்வீதியில் அமைந்துள்ள வீடுகளிலுள்ள வாகனங்களை வேறு இடங்களில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டனர்.

எனவே உரிய அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வீதியை சீர்செய்து தருமாறு மக்கள் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit