வவுனியா, விவசாய கல்லூரி மாணவர் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு!

பிறப்பு : - இறப்பு :

வவுனியா விவசாயக் கல்லூரியில் பாடவேளையில் செயன்முறையில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (சனிக்கிழமை) கல்லூரியில் அனுஸ்டிக்கப்பட்டது.

விவசாய கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் கல்லூரி பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

இந் நிலையில் குறித்த படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் அனுராதபுரம் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit