யாழ். தொண்டமனாறு கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்கும் இந்தியக் கழிவுப் பொருட்கள்!

பிறப்பு : - இறப்பு :

jaffna

யாழ். தொண்டமனாறு கடற்கரைப் பகுதிகளில் இந்தியாவில் இருந்து கழிவுப் பொருட்கள் கரையொதுங்கி வருவதாக அப்பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக குறித்த கழிவுப் பொருட்கள் கரையொதுங்கி வருவதுடன், மீன்வலைகளில் இவை அகப்படுவதால் மீன்பிடி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுச் சுகாதாரப்பிரிவினரிடம் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஒரு தொகுதி கழிவுகள் அகற்றப்பட்டிருப்பதுடன், அவை பரிசோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கழிவுப் பொருட்களில் வைத்தியசாலைக் கழிவுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மதுபானக் கழிவுகள் உள்ளடங்குவதாக அப்பிரதேச மீனவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த கழிவுப் பொருட்களில் மருத்துவசாலைக் கழிவுகள் காணப்படுவதால் பல்வேறுபட்ட தொற்றுநோய்கள் பரவக்கூடிய வாய்ப்புக்கள் கணப்படுவதால், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit