ஓங்கி நிற்கும் கிராணைட் கோட்டைகள்!! அதிர்ச்சி தகவல் !!

பிறப்பு : - இறப்பு :

மதுரை மாவட்டம் மேலூரில், கிராணைட் கல் வெட்டி எடுப்பதற்காக குளங்களை துறுத்து, நிலத்தடி நீர்வளத்தை அடியோடு அழிக்கப்பட்டிருப்பதை சகாயம் நேற்று தனது நான்காம் கட்ட ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்துள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரையில் பதுங்கியுள்ள கிராணைட் முறைகேட்டு முதலைகளை பிடிக்க தொடர்ந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் சகாயம்.

நேர்மையாக ஆய்வுகளை நடத்தி அரசாங்கத்தை ஏமாற்றி சொத்து சேர்த்துள்ள பல தொழிலதிபர்களை சட்டத்தின் முன் கொண்டு வரும் இவருக்கு எதிர்ப்புகளும், கொலை மிரட்டல்களும் கூட கிளம்பியுள்ளன. இருந்தாலும், தன் பணியில் பின்வாங்காமல், தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் சகாயம்.

நேற்று மேலூர் அருகில் உள்ள, இடையப்பட்டியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது 85 எக்கர் கண்மாய்யில், சுமார் 75 ஏக்கர் கிராணைட் வெட்ட மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கண்மாய் முழுவதும் கோட்டை போல் பெரிய பெரிய கிராணைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சகாயம் கூறியதாவது:

இது என்ன மன்னர் கோட்டையா? கண்மாயின் பவுண்டரி கற்கள் எங்கே? அரசு சொத்து ரூ.பல நூறு கோடி மதிப்புள்ள கற்களை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இந்தளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது. அதுகுறித்து யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இந்த இடத்தை பார்க்கும் போது கற்பனைக்கு எட்டாத ஏதோ ஒரு உலகத்தில் இருப்பது போல் அல்லவா இருக்கிறது. இந்த கண்மாய் நீரை பருகிய கால்நடைகள் தண்ணீர் குடிக்க எங்கே போகும்? என்று உரிய அதிகாரிகளிடம் கேட்டார்.

மிகவும் ஆழமான அந்த குவாரியினுள் இருந்து லாரிகள் மூலம் கற்களை எடுத்துவர, ஏழு இடங்களில் கொண்டை ஊசி வளைவுகள் இருந்துள்ளன.

அதோடு, மேலூர் எருமாபட்டியில் துவங்கி செம்மினிப்பட்டி, புறாக்கூடு மலை, இ.மலம்பட்டி, கீழையூர், நாவினிப்பட்டி, பதினெட்டாம் குடி, கொட்டக்குடி, திருவாதவூர், இடையபட்டி, கருப்புக்கால், இளங்கிபட்டி, சிவலிங்கம், ராஜாக்கூர், கருப்பாயூரணி, கூடக்கோவில் வரை 48 கி.மீ., நீளத்தில் ஆங்காங்கே கிரானைட் கற்களை கோட்டை போல் அடுக்கி வைத்து இருப்பதும், இதனால் 26 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் நாசமாகி உள்ளதும் சகாயத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கீழவளவில் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் 2011ல் இருந்து 2021 வரை கிராணைட் கற்களை வெட்டி எடுக்க உரிமை பெற்றிருந்தது. இந்த உரிமையை பறித்ததுடன் நிறுவனத்தையும் சீல் வைத்துள்ளார் சகாயம். குவாரியில் நீர் தேங்கியுள்ளதால், குவாரி எவ்வளவு ஆழம் என்பதை அளவிட முடியவில்லை.

தொடர்ந்து கருப்பக்கால் ஊரணியில், கடந்த 2003ம் ஆண்டு முதல் 2009 வரை கிராணைட் வேட்டி எடுக்க அனுமதி அளித்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் எப்படி உரிமை கொடுத்தார்கள் என்று விளக்கம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார் சகாயம். இதனை அடுத்து, அருகில் உள்ள கீழவளவில் பகுதியில் இன்றும் நாளையும் விசாரணை செய்ய உள்ளார் சகாயம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit