பொடுகு தொல்லையா? சுலபமான வழி இருக்கே

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்களுக்கு பொடுகு பிரச்சனை உள்ளது, இதனால் முடி உதிர்வு, தலை அரிப்பும் ஏற்படுகிறது.

எனவே மிக எளிமையாக பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட குறிப்புகள் இதோ,

  • சம அளவில் தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாற்றை கலந்து தலையில் தேய்த்து 20 நிமிடங்களுக்கு பின்னர் அலசவும்.
  • சம அளவில் தண்ணீர், எலுமிச்சை சாறு எடுத்துக் கொண்டு வெந்தயத்தை போட்டு சுமார் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும். இந்த கலவையை அரைத்து தலையில் தடவி 15 நிமிடங்களுக்கு பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். இப்படி செய்தால் பொடுகு தொல்லை தீருவதுடன், முடியும் அடர்த்தியாக வளரும்.
  • புளித்த தயிரை தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும், வாரத்திற்கு மூன்று முறை இப்படி செய்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
  • தேயிலை மர எண்ணெயுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து தலை குளித்து வந்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
  • ஆரஞ்சு தோல் பொடியை எலுமிச்சை சாறு கலந்து, தலை குளித்து வந்தால் அரை மணிநேரத்தில் பொடுகு தொல்லை நீங்கும்.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*