இந்தியாவை ஆட்டம் காண வைத்தது எப்படி? லக்மல் ஓபன் டாக்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியை ஆட்டம் காண வைத்தார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

இதில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 74 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், இரண்டு நாட்கள் மொத்தமே 32.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளது.

இப்போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய லக்மல் கூறுகையில், இந்திய போன்ற சிறந்த அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசும் போது பெருமையாக இருக்கிறது, இப்போட்டியில் எப்படியாவது 5 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும்.

இத்தொடரில் நான் தான் சீனியர் பந்து வீச்சாளராக உள்ளேன், கடந்த எட்டு வருட என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில், இந்திய அணிக்கு எதிராக நான் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இந்தியா வருவதற்கு முன்னர் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தொடர்பான வீடியோக்களை பார்த்தேன், அதில் எப்படி வீரர்களை வீழ்த்தலாம் என்பது குறித்தும் பயிற்சி எடுத்தேன், அதுமட்டுமின்றி உலகின் தலைசிறைந்த வீரரான கோஹ்லியை வெளியேற்றியது மிகவும் சிறப்பு, இத்தொடருக்காக கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டுள்ளோம், நிறைய திட்டங்களை வகுத்துள்ளோம், அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இப்போட்டியில் முதல் பந்திலே இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான கே.எல்.கோகுலை லக்மல் வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து தவானை போல்டாக்கியும், விராட் கோஹ்லியை எல்.பி.டபில்யூ என்ற முறையிலும் வெளியேற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*