ஆவா குழுவிற்கு எதிராக கடும் நடவடிக்கை!

பிறப்பு : - இறப்பு :

வடக்கில் ஆவா குழுவை போன்று தெற்கில் பாதாள குழுக்களையும் சுற்றிவளைப்பதற்கு ஆகக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அண்மை காலமாக ஆவா குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் எட்டு பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் யாழ் மாவட்ட பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் மட்டுமன்றி தெற்கிலும் பாதாளக் குழுக்களின் வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்த குழுக்களை சுற்றி வளைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.வெளிநாடுகளிலிருந்து பாதாளக்குழுக்களை வழிநடத்தும் நபர்கள் இருக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த நபர்களை கைதுசெய்து நாட்டுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit