மீண்டும் அரசுக்கு கைகொடுத்தது கூட்டமைப்பு!

பிறப்பு : - இறப்பு :

2018 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் 2 ஆம் வாசிப்பு திருத்தங்களுடன் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 5 மணியளவில் நடத்தப்பட்டது.

பாதீட்டுக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனால், 93 மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது.

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது.

ஜே.வீ.பியும், ஒன்றிணைந்த எதிரணியும் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தன.

இதேவேளை, மூன்றாவது வாசிப்பு மீது நாளை முதல் குழுநிலை விவாதங்கள் இடம்பெற்று இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் 9ஆம் திகதி நடைபெறும்,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit