இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததை இனிப்பு வழங்கிக் கொண்டாடினார் அன்புமணிராமதாசு!(படங்கள்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்து இலங்கை எதிர்கட்சி சார்பில் களமிறங்கிய மைத்திரிபாலசிறிசேனா வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை கொண்டாடும் விதமாக நேற்று(இன்று) தர்மபுரி பேருந்து நிலையத்தில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணிராமதாசு இனிப்பு வழங்கி பொதுமக்கள் மத்தியில் கொண்டாடினார்.

??????????

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அன்புமணிராமதாசு இலங்கை தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது உலகதமிழர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது ராஜபக்சே பொதுமக்களிடம் பேசும்போது தெரியாத தேவதைக்கு வாக்களிப்பதை விட தெரிந்த அசுரனுக்கு வாக்களிப்பதே மேல் என கூறி வாக்கு சேகரித்தார்.

??????????

ஆகவே இலங்கை அதிபர்தேர்தலில் அசுரன் வீழ்த்த பட்டுள்ளான். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபாலசிறிசேனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ராஜபக்சே செய்த தவறுகளுக்கும் ஊழல்களுக்கும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர் பகுதியில் நிறுத்த பட்டுள்ள ராணுவத்தை உடனயாக திரும்பபெறவேண்டும். இலங்கையில் தமிழர்கள் அமைதியுடன் வாழவும் அணைத்து உரிமைகளும் பெற்ற குடிமக்களாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.

??????????

ராஜபக்சே செய்த இனபடுகொலைகளுக்க அமைக்கபட்டுள்ள சர்வதேச விசாரணை குழுவை விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். தமிழர் தேசிய கூட்டமைப்பு சார்பில் வடக்குமாகாணத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பும் உதவியும் செய்யவேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

??????????

முந்தைய காங்கிரசு அரசு தான் ராஜபக்சேவிற்கு உதவி செய்தது. தற்போதைய மோடி அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழர் பிரச்சனைகளை தீர்க்க முன்வரவேண்டும். இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மற்றதின் மூலம் தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் ஈழ தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திரமோடியிடம் வலியுறுத்துவேன் என கூறினார்.

DSCN1649

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*