கண்முன்னே துடிதுடிக்க அக்கா கருகினாள்: உயிருக்கு போராடும் தங்கை கண்ணீர் பேட்டி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழகத்தில் காதலன் செய்த வெறிச்செயலால் இளம் பெண் உயிரிழந்ததால் அப்பெண்ணின் தங்கை எங்கள் அக்காவை காப்பாற்ற எவ்வளவோ போராடினோம் என்று பொலிசாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையின் ஆதம்பாக்கத்தில் இந்தூஜா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்த ஆகாஷ் என்ற இளைஞன் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டான்.

இதில் இந்துஜா உட்பட அவரின் தாயார் மற்றும் தங்கையும் சிக்கினர். இந்துஜா பரிதாபமாக வீட்டில் இறந்த நிலையில், தாயார் மற்றும் தங்கைக்கு சென்னை வனரகத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்து மருத்துவமனையில் இருக்கும் இந்துஜாவின் தங்கையான நிவேதாவிடம் பொலிசார் வாக்குமூலம் கேட்டுள்ளனர்.

அப்போது நிவேதா, சம்பவ தினத்தன்று இரவு எங்கள் வீட்டில் நான், இந்துஜா மற்றும் எனது அம்மா இருந்தோம். அப்போது 9 மணி அளவில் விட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது.

இதனால் அம்மா கதவை திறந்தார். அப்போது ஆகாஷ், இந்துஜாவிடம் பேச வேண்டும் என்று கூறினார். அதன் பின் அவனை வீட்டிற்குள் அனுமதித்தோம்.

வீட்டின் சோபாவில் எனது அக்காவுடன் பேசிக்கொண்டிருந்த ஆகாஷ் திடீரென்று மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து அக்காவின் மீது ஊற்றினான். இதைக் கண்ட நானும் எனது அம்மாவும் தடுக்க முயற்சித்த மீது எங்கள் மீதும் ஊற்றிவிட்டான்.

இதைத் தொடர்ந்து அவனை கீழே தள்ளிவிட்டுவிட்டோம், ஆனால் அவனோ சிகரெட் லைட்டரை பற்ற வைத்து விட்டான், இதில் எங்கள் 3 பேர் மீதும் தீ பரவியது.

இந்துஜாவை காப்பாற்ற நானும் அம்மாவும் போராடியதால், நாங்களும் கருகினோம், எங்கள் அலறல் சத்ததை கேட்டு கீழே இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்தனர். அவர்களை எல்லாம் ஆகாஷ் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டான்.

அதன் பின் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. தீயில் கருகிய எங்கள் அக்கா வீட்டிலே இறந்துவிட்டாள், அவளை காப்பாற்ற நாங்கள் எவ்வளவு போராடியும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் தாய் மற்றும் நிவேதா இருவரும் உயிருக்கு போராடி வருவதாகவும், தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*