மத்தல சர்வதேச விமான நிலையத்திற்குள் அட்டகாசம் செய்யும் யானைகள்!

பிறப்பு : - இறப்பு :

மத்தல சர்வதேச விமான நிலையத்திற்குள் புகுந்த யானைகள் அட்டகாசம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

யானைகள் சில மத்தல விமான நிலையத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு வேலிகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டு யானைகளின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவற்றினை உடைத்துக் கொண்டு யானைகள் உட்புகுந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திட்டத்திற்கு அமைய, மத்தல விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.

காட்டு விலங்கினங்கள் வாழும் பகுதியை அபிவிருத்தி செய்யும் நோக்கில், சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டது.

விமான நிலைய நிர்மாணிப்பு பணிகளுக்காக சீன அரசாங்கம் பல பில்லியன் ரூபாவினை செலவிட்டிருந்தது.

இந்நிலையில் விமான நிலையம் திட்டமிட்ட வகையில், பிரசித்தி பெறாத நிலையில் பெரும் நஷ்டத்திற்கு முகங்கொடுத்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் காட்டு விலங்கினங்கள் தங்கள் இருப்பிடங்களை தேடி விமான நிலையத்திற்குள் புகுந்து வருகின்றன.

இதன்காரணமாக விமான சேவை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் விமான நிலையத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாக வனவிலக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யானைகளை தூரப் பகுதிகளுக்கு விரட்டும் நடவடிக்கையில் ஹம்பாந்தோட்டை வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மஹிந்தவின் ஆச்சரியங்களில் ஒன்றாக மத்தல விமான நிலையம் அமைந்துள்ள போதிலும், காட்டு விலங்கினங்களுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit