விவசாயி வீட்டில் புகுந்து பெண்ணிடம் வன்முறையில் ஈடுபட்ட போலீசார்!

பிறப்பு : - இறப்பு :

கொடுத்த வழக்கை வாபஸ் பெறுமாறு விவசாயி வீட்டினுள் புகுந்து காவல் ஆய்வாளர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் – அய்யம்பேட்டை கிராமத்தைச் சார்ந்த கூலி விவசாயி திரு.ஏழுமலை. இவர் சில தினங்களுக்கு முன்பு சொத்துக் தகராறு காரணமாக போலீசில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த புகாரை வாபஸ் பெறுமாறு களம்பூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் விவசாயியை பலமுறை மிரட்டியுள்ளார்.

ஆனால் அதனை ஏழுமலை ஏற்காததால், வீட்டிற்கு சென்று ஏழுமலையின் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்த பெண்களிடம் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து விவசாயி ஏழுமலை, திருவண்ணாமலை எஸ்பி ஆரணி டிஎஸ்பி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் இதுவரையில் அந்த போலீசார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit