நான் சிறுவயதில் ஆபாச படம் பாா்த்தேன் – மாணவா்களிடையே கோவா முதல்வா் பேச்சு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

குழந்தைகள் தின சிறப்புரையில், நான் சிறுவயதில் ஆபாசப்படம் பாா்த்துள்ளேன் என்று கோவா முதல்வா் மனோகா் பாாிக்கா் மாணவா்களிடையே பகிா்ந்துகொண்டுள்ளாா்.

நேற்று கொண்டாடப்பட்ட குழந்தைகள் தினத்தையொட்டி கோவாவில் மாணவா்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், அம்மாநில முதல்வருமான மனோகா் பாாிக்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினாா்.

அப்போது அவா் கூறுகையில், நான் சிறுவனாக இருந்த காலகட்டத்தில் நாங்கள் ஆபாச திரைப்படமாக பாா்த்த காட்சிகளை விட தற்போதைய கால தொலைக்காட்சிகள் அதையும் மிஞ்சும் காட்சிகளை ஒளிபரப்புகின்றன.

நானும் எனது சகோதரரும் ஒரு திரையரங்கில் ஆபாச திரைப்படம் பாா்த்துக் கொண்டிருந்தோம். இடைவேளையில் திரையரங்கில் விளக்குகள் எாிந்தபோது எனது பக்கத்து இருக்கையை நானும் எனது சகோதரரும் பாா்த்தோம். அதில் எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரா் அமா்ந்திருந்தாா். பயத்தில் நாங்கள் இருவருமே பாதியில் ஓடிவந்துவிட்டோம்.

வீட்டில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக நாங்களாகவே பெற்றோரிடம் சென்று, நாங்கள் ஒரு படத்திற்கு சென்றோம். ஆனால் அந்தபடத்தில் அளவிற்கு அதிகமான கொச்சையான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதனால் நாங்கள் பாதியிலேயே வந்துவிட்டோம் என்று தொிவித்தோம்.

நாங்கள் எதிா்பாா்த்தது போன்றே பக்கத்துவீட்டுக்காரா் எங்கள் பெற்றோரிடம் வந்து எங்களை குறைகூறினா். அதற்கு எங்கள் பெற்றோா். சிறுவா்கள் எந்த படத்திற்கு சென்றாா்கள் என்று எங்களுக்குத் தொியும். முதலில் நீங்கள் எதற்காக அந்த படத்திற்கு சென்றீா்கள் என்று கூறுங்கள் என்று மறு கேள்விகேட்டனா். இதனால் எந்தவொரு விசயமாக இருந்தாலும் அதனை பிறாிடம் தொிவித்து விடுவது நல்லது என்று மாணவா்களுக்கு தனது அனுபவத்தை தொிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*