18 மாத குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையின் நண்பன்

பிறப்பு : - இறப்பு :

இந்திய தலைநகர் டெல்லியில் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு விட்டுச்சென்ற தந்தையின் நண்பனே 18 மாத பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்த சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஷாஷட்பூர் பகுதியில் வசிக்கும் இளம் தம்பதியினருக்கு 18 மாத பெண் குழந்தை இருந்திருக்கிறது. கடந்த திங்கட்கிழமை அன்று இருவரும் தங்கள் குழந்தையை, தங்களுடைய நண்பனிடம்(21) விட்டுவிட்டு வேலை நிமித்தம் வெளியே சென்று உள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் தனியா இருந்த நேரத்தில் குழந்தையை பலாத்கார கொடுமைக்கு ஆளாக்கியுள்ளான் குறித்த நபர். வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய குழந்தையின் தாயார் , குழந்தை அழுதுகொண்டே இருப்பதையும், குழந்தையின் இன உறுப்புகளில் ரத்தம் கசிவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் குழந்தை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர்.

காவல்துறையில் நடந்தவற்றை கூறி புகார் அளிக்கப்பட்டதை அடுத்து குறித்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். பலாத்காரம் செய்தவன் மீது குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கான கடுமையான தண்டனை வழங்கும் பாஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit