மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய கார்: மாணவரொருவர் வைத்தியசாலையில்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

bike-accident56

மோட்டார் சைக்கிளை காரொன்று மோதித் தள்ளியதால் ஏற்பட்ட விபத்தில் மாணவரொருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று மதியம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பாடசாலை மாணவனை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளொன்று பயணித்துள்ளது.

இதன்போது அந்த மோட்டார் சைக்கிளின் மீது வவுனியாவிலிருந்து, கண்டி வீதி நோக்கி பயணித்த கார் தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவரொருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit