போயஸ் கார்டன் முக்கிய அறையை பாதுகாக்க 40 பேர்: வெளியான ரகசிய தகவல்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் போக்குவரத்து ஊழியர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா இறந்த பிறகு போயஸ் கார்டன் வீடு பல்வேறு பரபரப்புக்குள்ளான நிலையில், அங்கு வசித்த சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.

பின்னர், அந்த வீடு நினைவிடமாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தினமும் பாதுகாப்புக்கு செல்வதாக பரபரப்பு தகவல் வெளியானது.

அதாவது, போயஸ் கார்டன் உள்பட தங்கள் உறவினர்கள் வீடுகளின் பாதுகாப்புக்காக சசிகலா ஆட்கள் பலர் மன்னார்குடியில் இருந்து களமிறக்கப்பட்டனர்.

கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டபோது கூடுதலாக பாதுகாவலர்கள் தேவைப்பட்டனர்.

அப்போது, சென்னை மாநகர போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தில் மாவட்ட நிர்வாகியாக உள்ள மன்னார்குடியை சேர்ந்த ஒருவர், சங்கத்தில் உள்ள பஸ் ஊழியர்களை வரவழைக்கலாம் என டிடிவி.தினகரனிடம் தெரிவித்தார்.

அதன்படியே அவர்கள் பாதுகாப்புக்கு வந்தனர். இந்த சூழலில் தான் போயஸ் வீட்டில் உள்ள முக்கிய அறையை பாதுகாக்க நம்பிக்கையான ஆட்கள் தேவைப்பட்டது.

இதற்கும் போக்குவரத்து சங்கத்தை சேர்ந்த 40 பேர் அங்கு அனுப்பட்டனர். இவர்கள் சபாரி அணிந்து தான் செல்வர். தாங்கள் போயஸ்கார்டன் செல்வதை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என தினகரன் தரப்பு மிரட்டியிருந்தது.

தினமும் டிப்போ வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சாதாரணமாக போயஸ் வீட்டுக்கு அவர்கள் சென்று விடுவர்கள்.

இவர்களுக்கு தனி சம்பளம் தரப்பட்டதும், இது கடந்த ஆறு மாதங்களாக நடந்து வருவதும் தெரியவந்துள்ளது.

சசிகலா குடும்பத்தினர் மீது ஐடி ரெய்டு நடந்துள்ள நிலையில் போயஸ்கார்டன் பாதுகாப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*