முரளிதரனை பின்னுக்கு தள்ளும் அஸ்வின்: இலங்கை போட்டியில் காத்திருக்கும் சாதனை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் அஸ்வின் குறைந்த இன்னிங்ஸில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 16-ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

இத்தொடருக்கு இந்திய அணியில் இருந்து சமீபகாலமாக ஓரங்கட்டப்பட்டு வந்த, அஸ்வின் மற்றும் ஜடேஜா தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் இத்தொடரில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் அஸ்வின் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினால், குறைந்த இன்னிங்ஸில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

அஸ்வின் தற்போது 52 போட்டிகளில் விளையாடி 292 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இலங்கை தொடர் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்டது என்பதால், அவர் நிச்சயம் 8 விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் முன்னாள வீரர் டென்னிஸ் லில்லீ 56-வது போட்டியில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 58 போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இந்த தொடரில் அஸ்வின் சாதிக்கும் பட்சத்தில் இரண்டு பேரையும் பின்னுக்கு தள்ளி அஸ்வின் முதலிடம் பிடிப்பார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*